
முற்றிலும் ஒளி வெள்ளத்தில், முதல் முறையாக வெள்ளை பந்தில், ஒவ்வொருவரும் பளிச்சிடும் கலர் உடையில் முற்றிலும் புதிதாக இருந்தது.
அதுவும் ஆஸ்திரேலியாவிலும் நியூசீலாந்ந்திலும் நடந்தால் மைதானங்கள் மிகவும் பளிச்சென்று இருந்தன.
போட்டிகள் ஆரம்பிபதற்கு முன்பே தினமலரிலும் இந்தியா டுடே பத்திரிகையிலும் கலர் கலராக படங்களை போட்டு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்தனர்.
அதுவும் இந்தியா டுடேயில் காம்ப்ளி சியர்கால்சுடன் நடுவில் ஆடி கொண்டு இருக்கும் ஒரு போட்டோ இன்னும் நினைவில் இருக்கிறது.
சில துளிகளை பகிர்ந்து கொள்ளலாம்.
1. தென் ஆப்ரிகா தடையை விலக்கி முதன் முதலில் உலக கோப்பை ஆட வந்தது.
2. டெண்டுல்கரை விட மஞ்சரேகர் முக்கியமான வீரராக இருந்தார்.4. தென் ஆப்ரிகா முக்கியமான வெற்றிகளை லீக் போட்டிகளில் பெற்றிருந்தாலும் இலங்கையிடம் தோற்றது. அப்போது இலங்கையின் கேப்டனாக அரவிந்த சில்வா இருந்தார். அந்த போட்டியில் வெற்றி பெற போராடியது ரணதுங்கா.
5. இந்தியா vs. ஆஸ்திரேலியா லீக் போட்டியில் இந்தியா 1 ரன்னில் தோற்றது. தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் இன்று வாய் கிழிய கமெண்ட் அடிக்கும் ரவி சாஸ்திரி. ஒரே ஒரு பவுண்டரியுடன் 67 பந்துகளில் 25 ரன் எடுத்தால் வெறுப்பு வராதா? ஆனால் அந்த மாட்சில் ஆலன் பார்டரை ஜடேஜா பிடித்த அபாரமான கேட்ச் இன்னும் நினைவில் இருக்கிறது. அவருக்கு ஒரு நாள் போட்டியில் நிரந்தர இடத்தை அந்த கேட்ச் பிடித்து தந்தது.6. பாகிஸ்தான் முக்கியமான போட்டிகளில் தோற்று வந்தாலும் அதிர்ஷ்டம் அவர்களை கை விடவில்லை. இங்கிலாந்துடன் போட்டி மழையால் தடைபட்டது. முதலில் முழு இன்னிங்க்ஸ் ஆடிய பாகிஸ்தான் வெறும் 70 ரன்களுக்குள் அணைத்து விக்கெட்டையும் இழந்தது. இவர்கள்தான் கோப்பையை வெல்வார்கள் என்று எவராவது சத்தியம் செய்தால் கிறுக்கன் என்று சொல்லி இருப்பார்கள்.
7. எல்லா முக்கிய மாட்சிகளிலும் ஒரு சிறிய அதிர்ச்சி கிடைப்பது போல் இதிலும் ஜிம்பாப்வே இங்க்லந்தை 9 ரன்களில் வென்றது.
8. பீல்டிங்கில் ஜான்டி ரோட்ஸ் கவனிகபட்டார். அதுவும் இன்சமாமை ரன் அவுட் செய்ய தற்கொலை படை தாக்குதல் நடத்தினாரே, அது உலக புகழ் பெற்றது.
9. இம்ரான் கானின் அபார தலைமை, இன்சமாமின் இளமையான மற்றும் மியான்டத்தின் பொறுப்பான ஆட்டங்கள், மற்றும் வாசிம் அக்ரமின் துடிப்பான பந்து வீச்சு, ஆகியவைதான் பாகிஸ்தானின் இந்த பெருவெற்றிக்கு காரணமாக அமைந்தது. முதல் சில ஆட்டங்களில் கிடைத்த தோல்விகளை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் முன்னேறியது, இம்ரானின் தலைமைக்கு கிடைத்த வெற்றி. மிகவும் சந்தோஷத்துடன் கிரிக்கெட் வாழ்விலிருந்து விடை பெற்றார் இம்ரான்.
10. இந்தியாவுக்கு என்ன கிடைத்தது? சச்சின் என்ற நம்பிக்கை நட்சத்திரம்.(இந்திய வெற்றி பெற்ற இரண்டு மாட்சுகளிலும், இவரே ஆட்ட நாயகன்). காப்டனை ஊருக்கு போனவுடன் மற்ற வேண்ட வேண்டும் என பத்திரிகைகள் போராடின. அசாருதீனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அதற்கு அடுத்து நீண்ட நாள் காப்டனாக இருந்தார்.
Ok, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No comments:
Post a Comment