நான்

My photo
கொஞ்சம் இந்த ப்ளாக் படிக்கப்பட்டவுடன் சொல்கிறேனே?

Followers

Monday, February 7, 2011

டேப்ளெட் பிசிக்கள் - ஒரு பார்வை


ஒரு முழுமையான டேபிளெட் பிசிக்களை உருவாக்க முயற்ச்சி 2001லிருந்தே தொடங்கிவிட்டது, முதன்முதலில் மைக்ரோசாப்ட் கம்பெனி இந்தப் பேட்டையில் காலை வைத்தது,

அதற்க்கு அப்புறம் நிறைய காலத்தி்ற்கு முயற்ச்சிகள், ஆனால் வெற்றிகரமாக எதுவும் அமையவில்லை. ஆப்பிளின் ஐபேட் வந்தவுடன்தான் போட்டியே துவங்கியது. ஐபேடின் விலை விண்ணைத் தொட்டாலும் அது தந்த யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மிகவும் புதிதாக இருந்தது. ஐபேட் வருவதற்கு காத்திருந்தது போல, டேப்ளெட் மழை அடுத்த 1 வருடத்தில் அடித்தது.

முதலில் சாம்ஸங் காலக்ஸி 7இஞ்ச் சைஸில் வந்தது, பின்பு டெல் ஸ்டீரீக் 5இஞ்ச் சைஸில் வந்தது(போனா இல்லை டேப்ளெட்டா என்ற குழப்பம் வேறு.)

எதிர்பார்க்கப்படவுள்ள மூன்று முக்கிய டேப்ளெட்கள்

1. ஆப்பிள் ஐபேட் 2

இந்த வருட ஏப்ரலில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தரும் வசதிகளை பற்றிய வதந்திகள் ஏராளமாக உள்ளது. முன்பக்க கேமரா இருக்குமாம், எஸ்டி கார்ட் போடக்கூடிய வசதி இருக்கும். ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ இரண்டிலும் இயங்ககூடியதாக இருக்கும். மிகவும் மெல்லியதாக இருக்கும். ஆனால் அதே விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2. மோட்டரோலா சூம்

ஆண்ட்ராய்ட் 3.0 ஹனிகோம்ப் இயங்குதளத்தில் இயங்கவல்லது. டெக்ரா 2 டுயல் பிராஸசர் இருப்பதால் மிகவும் வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டோரேஜ் 32ஜிபி இருக்கலாம், 5மெகாபிக்ஸல் கேமரா(ஹைடெபினஷினில் ரெகார்ட் செய்யும்) மற்றும் 2மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா. ஆனால் இதன் டீசர் வீடியோ அபாரமாக உள்ளது.

லிங்க்

3. பிளேக்பெர்ரி பிளேபுக்

களத்தில் பிளேக்பெர்ரி இறங்கியவுடன் ஆட்டம் வேகமாக சூடாகியது. இதன் ஸ்பெக்சும் அபாரமாக உள்ளது. 1ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் ஏ9 பிராஸசர், 1 ஜிபி ராம், 5எம்பி கேமரா, 3 எம்பி முன்பக்க கேமரா. ஆனால் திரை அகலம் கேலக்ஸி டேபை போல 7 இஞ்தான். இதன் டீசர் வீடியோவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இன்னும் பல புதிய டேப்ளட்கள் மார்கெட்டில் வந்த வண்ணம் உள்ளது. நெட்டாப் பிசிக்கள் வந்த 3 வருடத்தில் மறைய உள்ளது.

Saturday, February 5, 2011

1992 உலக கோப்பை நினைவுகள்

கிரிகெட்டை 1992 உலக கோப்பையிலிருந்துதான் என்னால் தொடங்க முடியும். அப்பொழுதான் டிவியில் முதன் முதலில் கிரிக்கெட்டை என்னவென்று சரியாக விளங்காமல் எல்லோரும் ரசிக்கிரர்களே என்று பார்க்க தொடங்கினேன்.



முற்றிலும் ஒளி வெள்ளத்தில், முதல் முறையாக வெள்ளை பந்தில், ஒவ்வொருவரும் பளிச்சிடும் கலர் உடையில் முற்றிலும் புதிதாக இருந்தது.
அதுவும் ஆஸ்திரேலியாவிலும் நியூசீலாந்ந்திலும் நடந்தால் மைதானங்கள் மிகவும் பளிச்சென்று இருந்தன.
போட்டிகள் ஆரம்பிபதற்கு முன்பே தினமலரிலும் இந்தியா டுடே பத்திரிகையிலும் கலர் கலராக படங்களை போட்டு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்தனர்.
அதுவும் இந்தியா டுடேயில் காம்ப்ளி சியர்கால்சுடன் நடுவில் ஆடி கொண்டு இருக்கும் ஒரு போட்டோ இன்னும் நினைவில் இருக்கிறது.

சில துளிகளை பகிர்ந்து கொள்ளலாம்.

1. தென் ஆப்ரிகா தடையை விலக்கி முதன் முதலில் உலக கோப்பை ஆட வந்தது.

2. டெண்டுல்கரை விட மஞ்சரேகர் முக்கியமான வீரராக இருந்தார்.

3. நியூசிலாந்து அணி எழுச்சி பெற்றது, இந்த உலக கோப்பயில்தான். அதுவும் Mark greatbach இலங்கையின் ஜெயசூர்யா போல் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தார். அந்த நேரத்தில் அது பெரிய விஷயம். மார்டின் க்ரோ தலைமையில் அணி பெரிய வெற்றிகளை பெற்றது. அனால் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் தோற்று, மறுபடியும் செமி பைனலில் மீண்டும் தோற்றது.

4. தென் ஆப்ரிகா முக்கியமான வெற்றிகளை லீக் போட்டிகளில் பெற்றிருந்தாலும் இலங்கையிடம் தோற்றது. அப்போது இலங்கையின் கேப்டனாக அரவிந்த சில்வா இருந்தார். அந்த போட்டியில் வெற்றி பெற போராடியது ரணதுங்கா.

5. இந்தியா vs. ஆஸ்திரேலியா லீக் போட்டியில் இந்தியா 1 ரன்னில் தோற்றது. தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் இன்று வாய் கிழிய கமெண்ட் அடிக்கும் ரவி சாஸ்திரி. ஒரே ஒரு பவுண்டரியுடன் 67 பந்துகளில் 25 ரன் எடுத்தால் வெறுப்பு வராதா? ஆனால் அந்த மாட்சில் ஆலன் பார்டரை ஜடேஜா பிடித்த அபாரமான கேட்ச் இன்னும் நினைவில் இருக்கிறது. அவருக்கு ஒரு நாள் போட்டியில் நிரந்தர இடத்தை அந்த கேட்ச் பிடித்து தந்தது.

6. பாகிஸ்தான் முக்கியமான போட்டிகளில் தோற்று வந்தாலும் அதிர்ஷ்டம் அவர்களை கை விடவில்லை. இங்கிலாந்துடன் போட்டி மழையால் தடைபட்டது. முதலில் முழு இன்னிங்க்ஸ் ஆடிய பாகிஸ்தான் வெறும் 70 ரன்களுக்குள் அணைத்து விக்கெட்டையும் இழந்தது. இவர்கள்தான் கோப்பையை வெல்வார்கள் என்று எவராவது சத்தியம் செய்தால் கிறுக்கன் என்று சொல்லி இருப்பார்கள்.

7. எல்லா முக்கிய மாட்சிகளிலும் ஒரு சிறிய அதிர்ச்சி கிடைப்பது போல் இதிலும் ஜிம்பாப்வே இங்க்லந்தை 9 ரன்களில் வென்றது.

8. பீல்டிங்கில் ஜான்டி ரோட்ஸ் கவனிகபட்டார். அதுவும் இன்சமாமை ரன் அவுட் செய்ய தற்கொலை படை தாக்குதல் நடத்தினாரே, அது உலக புகழ் பெற்றது.

9. இம்ரான் கானின் அபார தலைமை, இன்சமாமின் இளமையான மற்றும் மியான்டத்தின் பொறுப்பான ஆட்டங்கள், மற்றும் வாசிம் அக்ரமின் துடிப்பான பந்து வீச்சு, ஆகியவைதான் பாகிஸ்தானின் இந்த பெருவெற்றிக்கு காரணமாக அமைந்தது. முதல் சில ஆட்டங்களில் கிடைத்த தோல்விகளை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் முன்னேறியது, இம்ரானின் தலைமைக்கு கிடைத்த வெற்றி. மிகவும் சந்தோஷத்துடன் கிரிக்கெட் வாழ்விலிருந்து விடை பெற்றார் இம்ரான்.



10. இந்தியாவுக்கு என்ன கிடைத்தது? சச்சின் என்ற நம்பிக்கை நட்சத்திரம்.(இந்திய வெற்றி பெற்ற இரண்டு மாட்சுகளிலும், இவரே ஆட்ட நாயகன்). காப்டனை ஊருக்கு போனவுடன் மற்ற வேண்ட வேண்டும் என பத்திரிகைகள் போராடின. அசாருதீனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அதற்கு அடுத்து நீண்ட நாள் காப்டனாக இருந்தார்.

Ok, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.